பையர்நத்தம் அமிர்தேஸ்வரர் கோவிலில் சனி பிரதோஷ வழிபாடு

பையர்நத்தம் அமிர்தேஸ்வரர் கோவிலில் சனி பிரதோஷ வழிபாடு நடந்தது.

Update: 2022-10-22 19:00 GMT

பாப்பிரெட்டிப்பட்டி:

தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி தாலுகா பையர்நத்தம் கிராமத்தில், மயிலை மலை பாலமுருகன் கோவில் உள்ளது. இந்த மலைக்கோவில் அடிவாரத்தில் உள்ள அமிர்தேஸ்வரர், அமிர்தாம்பிகை கோவிலில் ஐப்பசி மாத தேய்பிறை சனி பிரதோஷத்தையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் வழிபாடு நடத்தினர்.

பையர்நத்தம் அமிர்தேஸ்வரர், அமிர்தாம்பிகை கோவிலில் ஐப்பசி மாத தேய்பிறை சனி பிரதோஷத்தையொட்டி நந்தி பெருமானுக்கு, பால், பன்னீர், மஞ்சள், சந்தனம், தேன், இளநீர், எலுமிச்சை, தயிர் அபிஷேகம் உள்பட பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து நந்தி பெருமானுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இந்த சிறப்பு பூஜையில் பையர்நத்தம் மற்றும் அதைச்சுற்றி உள்ள கிராம பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்