பெரம்பலூரில் சக்தி வாகன புகை பரிசோதனை மையம்

பெரம்பலூரில் சக்தி வாகன புகை பரிசோதனை மையம் திறக்கப்பட்டது.

Update: 2022-06-01 18:13 GMT

பெரம்பலூர் 

பெரம்பலூரில் புதிய பஸ் நிலையம் எதிரே இயங்கிவரும் வளர்மதி டிரைவிங் பயிற்சி பள்ளி, ஏ.பி.எஸ். டிரான்ஸ்போர்ட்ஸ், சக்தி ஏஜென்சீஸ் நிறுவனங்களின் மற்றும் ஓர் அங்கமான சக்தி வாகன புகை பரிசோதனை மையம் எளம்பலூர் இந்திராநகர் திருச்சி- சென்னை பைபாஸ் சாலையில் உள்ள வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் எதிரே அமைக்கப்பட்டு அதன் திறப்பு விழா நேற்று நடந்தது. விழாவில் வளர்மதி, சக்தி நிறுவனங்களின் உரிமையாளர் பாலசுப்ரமணியன் அனைவரையும் வரவேற்றார். இதில் சிறப்பு விருந்தினராக முன்னாள் மத்திய மந்திரியும், தி.மு.க. துணை பொதுச்செயலாளருமான ஆ.ராசா எம்.பி. கலந்துகொண்டு, வாகன புகை பரிசோதனை மையத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து குத்துவிளக்கு ஏற்றி வைத்தார். விழாவிற்கு பெரம்பலூர் எம்.எல்.ஏ. பிரபாகரன், வட்டாரப் போக்குவரத்து அதிகாரி வி.எஸ்.கணேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாவட்ட செயலாளர் குன்னம் ராஜேந்திரன், மாவட்ட துணைச் செயலாளர் தழுதாழை பாஸ்கர், தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர் ராஜேந்திரன், நகர்மன்ற உறுப்பினர் அரணாரை துரை.காமராஜ், ஒன்றிய செயலாளர்கள் அண்ணாதுரை, பாடாலூர் சோமு.மதியழகன், மோட்டார் வாகன ஆய்வாளர் கருப்புசாமி மற்றும் வேப்பந்தட்டை, வேப்பூர், ஆலத்தூர் ஒன்றிய தி.மு.க. செயலாளர்கள், பெரம்பலூர் நகர தி.மு.க. நிர்வாகிகள், டிரைவிங் பயிற்சி பள்ளி உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்