வேதாரண்யேஸ்வரர் கோவிலில் வேதநாயகிக்கு சக்தி அலங்காரம்
நவராத்திரி விழாவையொட்டி வேதாரண்யேஸ்வரர் கோவிலில் வேதநாயகிக்கு சக்தி அலங்காரம் செய்யப்பட்டது.
வேதாரண்யத்தில் வேதாரண்யேஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு வேதநாயகி அம்மன் அருள்பாலித்து வருகிறார். இக்கோவிலில் நேற்றுமுன்தினம் நவராத்திரி விழா தொடங்கியது. விழாவையொட்டி அம்மனுக்கு அபிஷேக, ஆராதனைகள் செய்யப்பட்டது. பின்னர் அம்மனுக்கு நவராத்திரி மண்டபத்தில் சக்தி அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து மகாலட்சுமி அம்மன் கோவில் பிரகாரத்தில் வீதியுலா நடந்தது. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். விழாவில் தினமும் வேணுகோபால் அலங்காரம், மதுரை மீனாட்சி அலங்காரம், ஆண்டாள் அலங்காரம், காலிங்கன் அலங்காரம், கப்பல் அலங்காரம், சிவலிங்க பூஜை அலங்காரம், வெண்ணைத்தாழி அலங்காரம், மகிஷாசுரமர்த்தினி அலங்காரம் என பல்வேறு அலங்காரத்தில் வருகிற 23-ந்தேதி வரை அம்மன் பக்தா்களுக்கு அருள்பாலிக்கிறார். 24-ந்தேதி சுந்தரமூர்த்தி சுவாமி குதிரை வாகனத்தில் எழுந்தருளி, வீதியுலாவாக சென்று தோப்புத்துறை ெரயில்வே கேட் அருகே அம்பு போடும் நிகழ்ச்சி நடைபெறும். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி, பணியாளா்கள், உபயதாரா்கள் செய்து வருகின்றனர்.