தமிழக தலைமைத் தகவல் ஆணையராக ஷகீல் அக்தர் நியமனம்
தமிழக தலைமைத் தகவல் ஆணையராக ஷகீல் அக்தர் நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை,
தகவல் அறியும் உரிமை சட்டத்தின் அடிப்படையில் 2005-ல் மாநில தகவல் ஆணையம் தோற்றுவிக்கப்பட்டது. இந்த நிலையில் மாநில தகவல் தலைமை ஆணையரை தேர்வு செய்வது தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலமையில் இன்று ஆலோசனை கூட்டம் நடைப்பெற்றது . இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழக தலைமைத் தகவல் ஆணையராக ஷகீல் அக்தர் நியமிக்கப்பட்டுள்ளார். முன்னாள் ஏடிஜிபி தாமரைக்கண்ணன் உள்ளிட்ட 4 பேர் தகவல் ஆணையர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். பிரியாகுமார், திருமலைமுத்து, எம்.செல்வராஜ் ஆகியோர் மாநில தகவல் ஆணையர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.