இந்திய மாணவர் சங்கத்தினர் ரெயில் மறியல் போராட்டம்

இந்திய மாணவர் சங்கத்தினர் ரெயில் மறியல் போராட்டம்

Update: 2022-06-22 16:54 GMT

திருப்பூர்,

மத்திய அரசின் அக்னிபத் திட்டத்தை முழுமையாக திரும்பப் பெறக்கோரி இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் ரெயில் மறியல் போராட்டம் நேற்று மாலை திருப்பூர் ரெயில் நிலையம் முன் நடைபெற்றது. போராட்டத்துக்கு மாவட்ட தலைவர் பிரவீன்குமார் தலைமை தாங்கினார். துணை தலைவர்கள் கல்கி, ரேவந்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில துணை தலைவர் சம்சீர் அகமது கோரிக்கைகள் குறித்து பேசினார். அக்னிபத் திட்டத்தை திரும்ப பெறக்கோரி கோஷங்கள் எழுப்பினார்கள். ரெயில் நிலையம் முன் ஆர்ப்பாட்டத்துடன் நிறைவு செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்