இளம்பெண்ணை பாலியல் உறவுக்கு அழைத்த 3 பேர் கைது
மெஞ்ஞானபுரம் அருகே இளம்பெண்ணை பாலியல் உறவுக்கு அழைத்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
மெஞ்ஞானபுரம்:
மெஞ்ஞானபுரம் அருகே உள்ள கடாச்சபுரம் முத்துகிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் துரைசிங். கட்டிட தொழிலாளி. குடும்ப நண்பரான, அதே ஊரைச் சேர்ந்த சாமுவேல் இவரது வீட்டிற்கு அடிக்கடி வந்து செல்வது வழக்கம். இதை அதே பகுதி வள்ளியம்மாள்புரத்தைச் சேர்ந்த சந்ரு என்ற சந்திரசேகர் (28), முத்துகிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த வேதமுத்து (42), ராபர்ட் குமார் (30) ஆகிய 3 பேரும் துரைசிங் வீட்டிற்கு சாமுவேல் வந்து செல்லுவதை செல்போனில் வீடியோ எடுத்து வைத்துள்ளனர். இந்நிலையில் துரைசிங் வீட்டில் இல்லாத நேரத்தில், செல்போன் காட்சியை காட்டி அவரது மனைவியை மிரட்டி பாலியல் உறவுக்கு அழைத்து தொந்தரவு செய்துள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில் மெஞ்ஞானபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சந்திரசேகர், வேதமுத்து, ராபர்ட்குமார் ஆகிய 3பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.