பெண்ணுக்கு பாலியல் தொல்லை;அ.ம.மு.க. நிர்வாகி கைது

சாத்தான்குளம் அருகே பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில் அ.ம.மு.க. நிர்வாகி கைது செய்யப்பட்டார்.

Update: 2023-06-22 18:45 GMT

தட்டார்மடம்:

சாத்தான்குளம் அருகே பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அ.ம.மு.க. நிர்வாகி கைது செய்யப்பட்டார்.

அ.ம.மு.க. நிர்வாகி

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள இடைச்சிவிளை எம்மா கிழவிவிளை பகுதியைச் சேர்ந்தவர் தங்கராஜ். இவருடைய மகன் வின்சென்ட் ராஜ் (வயது 32). கார் டிரைவரான இவர் அ.ம.மு.க. கட்சியின் எம்.ஜி.ஆர். மன்ற செயலாளராக இருந்து வருகிறார்.

சம்பவத்தன்று அந்த பகுதியில் உள்ள ஒரு வீட்டில் மின்விளக்கு பழுதானது. இதையடுத்து அந்த வீட்டில் வசித்து வந்த 35 வயது மதிக்கத்தக்க பெண் மின்விளக்கை பழுது பார்ப்பதற்காக அந்த வழியாக சென்ற வின்சென்ட் ராஜை அழைத்துள்ளார்.

பாலியல் தொல்லை-கைது

இதையடுத்து அவர் அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்றார். அந்த சமயத்தில் வின்சென்ட் ராஜ் திடீரென்று அந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் சத்தம் போட்டார். பின்னர் வின்சென்ட் ராஜ் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டார்.

இதுகுறித்து தட்டார்மடம் போலீஸ் நிலையத்தில் அந்த பெண் புகார் அளித்தார். அதன்பேரில், சப்-இன்ஸ்பெக்டர் முகம்மது சபீக் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். பின்னர் இதுதொடர்பாக வின்சென்ட் ராஜை போலீசார் நேற்று கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்