மாணவிக்கு பாலியல் தொல்லை: தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை-சேலம் கோர்ட்டு தீர்ப்பு
மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து சேலம் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.
பாலியல் தொல்லை
சேலம் அருகே நெய்காரப்பட்டி கிழக்கு வட்டம் பகுதியை சேர்ந்தவர் பிரபு (வயது 36). இவர் லாரி பழுது பார்க்கும் பட்டறையில் வேலை பார்த்து வந்தார். பிரபு கடந்த 2013-ம் ஆண்டு 15 வயதுடைய 9-ம் வகுப்பு படித்த மாணவி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். இதுதொடர்பாக கடந்த 2019-ம் ஆண்டு அந்த மாணவியின் தாய் கொண்டலாம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி பிரபுவை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். இதற்கிடையில் உடல்நலம் குறைவால் அந்த மாணவி இறந்துவிட்டாள். மாணவிக்கு பாலியல் தொல்லை தொடர்பான வழக்கு விசாரணை சேலம் போக்சோ சிறப்பு கோர்ட்டில் வழக்கு நடந்தது.
ஆயுள் தண்டனை
இந்த வழக்கில் விசாரணை முடிவடைந்ததால் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. அப்போது மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த குற்றத்திற்காக பிரபுவுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.6 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி ஜெயந்தி தீர்ப்பு கூறினார்.