வளர்ப்பு மகளுக்கு பாலியல் தொந்தரவு

வளர்ப்பு மகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தந்தை கைது செய்யப்பட்டார்

Update: 2022-06-05 20:49 GMT


திருவிடைமருதூர்

கும்பகோணம் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன். திருமணமான இவருக்கு குழந்தைகள் இல்லை. இதனால், மனைவியின் உறவினரின் பெண் குழந்தையை தத்து எடுத்து வளர்த்து வந்தார். தற்போது அந்த குழந்தைக்கு 13 வயதாகியது. சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்த அந்த சிறுமியிடம் ராஜேந்திரன் மிரட்டி பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின்பேரில் நாச்சியார் கோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரேகாராணி, ராஜேந்திரன் மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தார்.





Tags:    

மேலும் செய்திகள்