பெண் தூய்மை பணியாளருக்கு பாலியல் தொல்லை; சுகாதார ஆய்வாளர் மீது வழக்கு

திசையன்விளையில் பெண் தூய்மை பணியாளருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சுகாதார ஆய்வாளர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான அவரை தேடி வருகின்றனர்.

Update: 2023-02-20 20:42 GMT

திசையன்விளை:

நெல்லை மாவட்டம் திசையன்விளை பேரூராட்சியில் சுகாதார ஆய்வாளராக பணியாற்றுபவர் நவராஜ். திசையன்விளை பேரூராட்சியில் தூய்மை பணியாளராக பணியாற்றும் விதவை பெண் சம்பவத்தன்று பேரூராட்சி குப்பை கிடங்கில் இருந்தபோது, அவருக்கு நவராஜ் பாலியல் தொல்லை கொடுத்து தவறாக நடக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அந்த பெண், திசையன்விளை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில், இந்திய தண்டனை சட்டம் 294 பி (ஆபாச செயல்), 354 ஏ (தாக்குதல்), 506 (1) (மிரட்டுதல்) ஆகிய பிரிவுகளில் நவராஜ் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான அவரை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த நிலையில் சுகாதார ஆய்வாளர் நவராஜ் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, நேற்று திசையன்விளை பேரூராட்சி அலுவலகம் முன்பு தூய்மை பணியாளர்கள் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்