மாணவிக்கு பாலியல் தொந்தரவு; வீடியோ எடுத்து மிரட்டிய 2 பேர் கைது
மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து, வீடியோ எடுத்து மிரட்டிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருச்சி எடமலைப்பட்டிபுதூர் செட்டியப்பட்டியை சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 20). இவருடைய நண்பர் பரத்(21). இவர்கள் இருவரும் திருச்சியை சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவியை கடந்த மாதம் கட்டாயப்படுத்தி பாலியல் தொந்தரவு செய்ததோடு, அதை செல்போனில் வீடியோ எடுத்து மாணவியை மிரட்டியுள்ளனர். இது பற்றி அறிந்த மாணவியின் பெற்றோர் கண்டோன்மெண்ட் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து பிரகாஷ், பரத் ஆகியோரை கைது செய்தனர்.