சிறுமிக்கு பாலியல் தொந்தரவு; முதியவர் போக்சோவில் கைது

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு; முதியவர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-09-20 18:06 GMT

கீரனூர்:

கீரனூர் அருகே வெண்ண முத்துப்பட்டி கிராமத்தில் அங்கன்வாடி பணியாளராக பணியாற்றி வருபவர் அன்னக்கொடி (வயது 54). இவரது கணவர் காசி (60). இந்நிலையில், நேற்று முன்தினம் அன்னக்கொடி தனது கணவரை அங்கன்வாடியில் உள்ள குழந்தைகளை கவனித்து கொள்ளும்படி கூறிவிட்டு அவர் வெளியே சென்று உள்ளார். அப்போது அங்குள்ள 4 வயது சிறுமிக்கு காசி பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதையடுத்து அந்த சிறுமி தனது தாயிடம் நடந்ததை கூறியுள்ளார். இதுகுறித்து சிறுமியின் தாய் கீரனூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில், இன்ஸ்பெக்டர் கலைமான், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து காசியை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் இந்த சம்பவத்துக்கு துணையாக இருந்ததாக அன்னக்கொடியையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்