சிறுவனுக்கு பாலியல் தொந்தரவு;போக்சோவில் தொழிலாளி கைது

கோவை அருகே சிறுவனுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தொழிலாளியை போலீசார் போக்சோவில் கைது செய்தனர்.

Update: 2023-10-22 18:45 GMT

பேரூர்

கோவை அருகே சிறுவனுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தொழிலாளியை போலீசார் போக்சோவில் கைது செய்தனர்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

சிறுவனுக்கு பாலியல் தொல்லை

கோவையை சேர்ந்த 14 வயது சிறுவன், அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறான். கடந்த 7-ந் தேதி சிறுவன் தனது உறவினர் வீட்டிற்கு சென்றான். பின்னர் அங்கு வீட்டிற்கு வெளியே விளையாடி கொண்டிருந்தான்.

அப்போது அங்கு வந்த ராமராஜ் என்ற தொழிலாளி சிறுவனிடம் சென்று நைசாக பேச்சு கொடுத்தார். தொடர்ந்து சிறுவனை தனியாக அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது. மேலும் இதுகுறித்து வெளியே கூறினால் கொலை செய்துவிடுவதாக சிறுவனை மிரட்டியதாக கூறப்படுகிறது.

போக்சோவில் கைது

இந்த நிலையில் சிறுவனின் உடல்நிலை பாதிக்கப்பட்டது. அப்போது சிறுவனிடம் பெற்றோர் கேட்டபோது, தனக்கு நடந்த சம்பவம் குறித்து அழுது கொண்டே கூறியுள்ளான்.

இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், இதுகுறித்து பேரூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில், ராமராஜ் மீது போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்