8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை; போக்சோ சட்டத்தில் தொழிலாளி கைது

8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக போக்சோ சட்டத்தில் தொழிலாளி கைது செய்யப்பட்டாா்.

Update: 2022-07-14 21:17 GMT

சத்தியமங்கலம்

சத்தியமங்கலம் பகுதியை சேர்ந்தவர் முருகன் (வயது 41). கூலித்தொழிலாளி. இவர் அந்த பகுதியை சேர்ந்த 8 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி பக்கத்தில் உள்ள பள்ளத்துக்கு அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. அப்போது அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் பார்த்து சத்தம்போடவே முருகன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் சத்தியமங்கலம் போலீசில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் இந்திராணி சோபியா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். இதுதொடர்பாக போக்சோ சட்டத்தின் கீழ் முருகனை கைது செய்தார்

Tags:    

மேலும் செய்திகள்