சிறுமிக்கு பாலியல் தொல்லை
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த உறவினர் கைது செய்யப்பட்டார்.
காரைக்குடி,
காரைக்குடியை சேர்ந்த 14 வயது சிறுமி பள்ளி ஒன்றில் 9-ம் வகுப்பு படித்து வருகிறாள். இந்த சிறுமியின் தந்தை இறந்துவிட்டதால் தாயின் பராமரிப்பில் வளர்ந்து வருகிறாள். இந்நிலையில் சிறுமியின் உறவினரான தேவகோட்டை அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த ரமேஷ் (வயது 37) என்பவர் சிறுமியின் தாய் வேலைக்கு சென்ற நேரத்தில் அவளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து சிறுமியின் தாய் காரைக்குடி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில். போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து ரமேசை கைது செய்தனர்.