பாதாள சாக்கடை பணிகள் ஒருவாரத்தில் முடிக்கப்படும்; கார்த்திகேயன் எம்.எல்.ஏ. தகவல்

பாதாள சாக்கடை பணிகள் ஒருவாரத்தில் முடிக்கப்படும் என கார்த்திகேயன் எம்.எல்.ஏ. தெரிவித்தார்.

Update: 2022-06-20 16:18 GMT


வேலூர் சத்துவாச்சாரி சி.எம்.சி. காலனி பகுதியில் பாதாள சாக்கடை திட்டப்பணிகளால் தெருக்கள் சேறும், சகதியுமாக உள்ளதாக புகார் எழுந்தது. அதன்பேரில் வேலூர் எம்.எல்.ஏ. கார்த்திகேயன், மாநகராட்சி மேயர் சுஜாதா ஆகியோர் அங்கு ஆய்வு செய்தனர். அப்போது அங்கு நடைபெற்று வரும் பாதாள சாக்கடை திட்ட பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு எம்.எல்.ஏ. உத்தரவிட்டார். மேலும், ஒரு வாரத்தில் பணிகள் முடிக்கப்பட்டு சாலைகள் அமைக்கப்படும் என்றார்.

அதைத்தொடர்ந்து அங்குள்ள ரேஷன் கடைகளில் வினியோகிக்கப்படும் அரிசியின் தரத்தினையும் அவர்கள் ஆய்வு செய்தனர்.

ஆய்வின்போது 2-வது மண்டல குழு தலைவர் நரேந்திரன், உதவி கமிஷனர் வசந்தி, கவுன்சிலர் கணேஷ்சங்கர் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்