குன்னூர் நகராட்சியில்கழிவுநீர் கால்வாயில் உடைப்பு-சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
குன்னூர் நகராட்சியில்கழிவுநீர் கால்வாயில் உடைப்பு- சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
குன்னூர்
குன்னூரில் பழைய ஆஸ்பத்திரி குடியிருப்பு பகுதி உள்ளது. இந்த பகுதி குன்னூர் நகராட்சியின் 11-வது வார்டிற்கு உட்பட்டது. இந்த பகுதியில் கடந்த 8 ஆண்டுகளாக எந்த ஒரு பணியும் நடைபெறவில்லை. இந்தநிலையில் அந்தப்பகுதியில் உள்ள கழிவுநீர் கால்வாய் உடைந்துவிட்டது. இதனால் கழிவுநீர் சாலைகளில் செல்லும் நிலை ஏற்பட்டு உள்ளது. அதனால் பயங்கரமான துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்கள் பெரிதும் சிரமப்பட்டு வருகிறார்கள். மேலும் சாலையை பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் அந்தப் பகுதியில் நோய் பரவம் அபாயம் ஏற்பட்டுள்ளது. அதனால் கழிவுநீர் கால்வாயை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளார்கள்.
இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:- நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றபோது சில பணிகளை மட்டும் நடைபெற்றது. ஆனால் பொதுமக்களுக்கு தேவையான பிரதான அடிப்படை வசதியான நடைபாதை மற்றும் கழிவுநீர் கால்வாய் சீரமைக்கப்படவில்லை. இது குறித்து பலமுறை நகராட்சி அதிகாரிகள் மற்றும் அரசியல் பிரமுகர்களிடம் கூறியும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே போர்க்கால அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.