மூலப்பாளையத்தில் சாலையில் பெருக்கெடுத்து ஓடும் கழிவுநீர்- பொதுமக்கள் அவதி
மூலப்பாளையத்தில் சாலையில் பெருக்கெடுத்து ஓடும் கழிவுநீர்- பொதுமக்கள் அவதி
ஈரோடு பூந்துறைரோடு மூலப்பாளையம் பகுதியில் செல்லும் பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டது. இதனால் சாலையோரத்தில் இருந்து கழிவுநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. அங்கு பொதுமக்கள் நடந்து செல்வதற்கே மிகவும் சிரமப்படுகின்றனர். வாகனங்கள் வேகமாக செல்லும்போது மக்கள் மீது கழிவுநீர் படுவதால் அவர்கள் அவதி அடைகின்றனர். எனவே அடைப்பை சரிசெய்து கழிவுநீர் தேங்காத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.