சாலையில் ஆறாக ஓடும் கழிவுநீர்

பாதாள சாக்கடை குழி நிரம்பி கழிவுநீர் சாலையில் ஆறாக ஓடுகிறது. இதனால் பொதுமக்கள் கடும் அவதியடைந்துள்ளனர்.

Update: 2022-07-27 16:49 GMT

பொள்ளாச்சி, ஜூலை.28-

பாதாள சாக்கடை குழி நிரம்பி கழிவுநீர் சாலையில் ஆறாக ஓடுகிறது. இதனால் பொதுமக்கள் கடும் அவதியடைந்துள்ளனர்.

பாதாள சாக்கடை திட்டம்

பொள்ளாச்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் ரூ.170 கோடியே 22 லட்சம் செலவில் குடிநீர் வடிகால் வாரியம் மூலம் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. மேலும் 7900 ஆழ் இறங்கு குழிகள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த திட்டத்தின் மூலம் சேகரிக்கப்படும் கழிவுநீர் சந்தைபேட்டையில் உள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு கொண்டு சுத்திகரிக்கப்படுகிறது. அங்கு தினமும் 11.25 மில்லியன் லிட்டர் கழிவுநீர் சுத்திகரிப்பு செய்யும் வகையில் திட்டம் வடிவமைக்கப்பட்டு உள்ளது.

தற்போது பாதாள சாக்கடை திட்ட பணிகள் முடிக்கப்பட்டு, வீட்டு இணைப்பு கொடுக்கும் பணி நடந்து வருகிறது. இதற்கிடையில் வடுகபாளையம் நுண் உரமாக்கல் மையம் முன் உள்ள ஆழ் இறங்கு குழியில் கழிவுநீர் நிரம்பி வெளியாகி வருகிறது. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:-

நோய் பரவும் அபாயம்

நகராட்சி பகுதியில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் முடிந்து வீட்டு இணைப்பு கொடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நகரில் ஆங்காங்கே ஆழ் இறங்கு குழிகள் நிரம்பி கழிவுநீர் வெளியேறி வருகிறது. வடுகபாளையம் நுண்உரமாக்கல் மையம் அருகில் பல நாட்களாக ஆழ் இறங்கு குழியில் இருந்து கழிவுநீர் வெளியேறி சாலையில் ஆறாக ஓடுகிறது.

இதை அதிகாரிகளும் கண்டுகொள்ளவில்லை. இதனால் ரோட்டில் கழிவுநீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி வருகிறது. இதனால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. மேலும் துர்நாற்றம் வீசுவதால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கடும் அவதிப்படுகின்றனர். எனவே அதிகாரிகள் ஆழ்இறங்கு குழியை சீரமைத்து கழிவுநீர் வெளியேறுவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்