இறகுப்பந்து போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற மாணவனுக்கு சேவூர் ராமச்சந்திரன் எம்.எல்.ஏ.பாராட்டு
தேசிய அளவிலான இறகுப்பந்து போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற மாணவனுக்கு சேவூர் ராமச்சந்திரன் எம்.எல்.ஏ.நேரில் சென்று பாராட்டினார்.
ஆரணி
தேசிய அளவிலான இறகுப்பந்து போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற மாணவனுக்கு சேவூர் ராமச்சந்திரன் எம்.எல்.ஏ.நேரில் சென்று பாராட்டினார்.
ஆரணியை அடுத்த இ.பி.நகர் பகுதியை சேர்ந்த உதயசங்கர்-தமிழரசி தம்பதியரின் மகன் பிரபு பிளஸ்-2 படித்து வருகிறார். இவர் ஐதராபாத்தில் நடந்த தேசிய அளவிலான இறகு பந்து போட்டியில் தங்கப்பதக்கம் பெற்று சாதனை படைத்தார்.
மாணவர் பிரபுவை முன்னாள் அமைச்சரான சேவூர் எஸ். ராமச்சந்திரன் எம்.எல்.ஏ., அவரது வீட்டிற்கு நேரில் சென்று சால்வை அணிவித்து பாராட்டு தெரிவித்து வாழ்த்தினர்.
அப்போது அ.தி.மு.க.நகரச் செயலாளர் அசோக் குமார், நகர சபை உறுப்பினர்கள் ரம்யா குமரன், ஏ.ஜி.மோகன், முன்னாள் அரசு வக்கீல் வி.வெங்கடேசன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் சரவணன் ஆகியோர் உடனிருந்தனர்.