தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 20 வழக்குகளில் ரூ.1 கோடிக்கு தீர்வு

அரக்கோணத்தில் நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 20 வழக்குகளில் ரூ.1 கோடிக்கு தீர்வு காணப்பட்டது.

Update: 2023-09-09 13:21 GMT

ரூ.1 கோடிக்கு தீர்வு

அரக்கோணம் ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் நேற்று அரக்கோணம் வட்ட சட்டப்பணிகள் குழுவின் தலைவரும், சார்பு நீதிபதியுமான எம்.அருந்ததி தலைமையில் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. மாவட்ட உரிமையியல் நீதிபதி எம்.ஷாகிரா பானு மற்றும் வழக்கறிஞர் எம்.வீரராகவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் பல்வேறு வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. அதில் 20 வழக்குகள் முடிக்கப்பட்டு ரூ.1 கோடியே 2 லட்சத்திற்கு தீர்வு காணப்பட்டது. மேலும் குற்றவியல் வழக்குகளில் 344 வழக்குகள் முடிக்கப்பட்டு அபராத தொகையாக ரூ.3,76,380 வசூல் செய்யப்பட்டது.

தம்பதி சேர்த்துவைப்பு

மேலும் பல ஆண்டுகாலமாக கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்த ஒரு தம்பதி சமரசத்தின் மூலம் சேர்த்து வைக்கப்பட்டனர். இதில் வழக்கறிஞர்கள் மற்றும் பொது மக்கள் பலர் கலந்துகொண்டு தங்கள் வழக்குகளை சமரசமாக முடித்துக்கொண்டனர். உடனடியாக தீர்வு கிடைத்ததால் பொது மக்கள் மனநிறைவுடன் சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்