மக்கள் நீதிமன்றத்தில் 354 வழக்குகளுக்கு தீர்வு

கள்ளக்குறிச்சியில் மக்கள் நீதிமன்றத்தில் 354 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.

Update: 2023-05-13 18:45 GMT

கள்ளக்குறிச்சி:

கள்ளக்குறிச்சி ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் வட்ட சட்டப்பணிக்குழு சார்பில் மக்கள் நீதிமன்றம் நடந்தது. இதற்கு 3-வது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிபதி கீதாராணி தலைமை தாங்கினார். முதன்மை சார்பு நீதிபதி மைதிலி, கூடுதல் சார்பு நீதிபதி தனசேகரன், முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி அகமது அலி, முதலாவது கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதி சுகந்தி, முதலாவது குற்றவியல் நீதிபதி ஹரிஹரசுதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சிவில் வழக்கு, மோட்டார் வாகன விபத்து வழக்குகள், வங்கி மற்றும் காசோலை வழக்கு உள்பட இதர வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதில் 13 சிவில் வழக்குகளுக்கு ரூ.61 லட்சத்து 31 ஆயிரத்து 76 மதிப்பிலும், மோட்டார் வாகன விபத்து 10 வழக்குகளுக்கு ரூ.55 லட்சத்து 88 ஆயிரம் மதிப்பிலும், வங்கி மற்றும் காசோலை உள்பட இதர 331 வழக்குகளுக்கு ரூ.64 லட்சத்து 71 ஆயிரத்து 511 மதிப்பிலும் சமரச தீர்வு காணப்பட்டது. மொத்தம் 354 வழக்குகளுக்கு ரூ.1 கோடியே 81 லட்சத்து 90 ஆயிரத்து 587 மதிப்பில் சமரச தீர்வு காணப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதில் வழக்கறிஞர்கள் சங்க தலைவர் ராமசாமி, செயலாளர் சீனிவாசன், வழக்கறிஞர் ரங்கராஜன், அரசு வழக்கறிஞர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்