மக்கள் நீதிமன்றத்தில் 3,211 வழக்குகளுக்கு தீர்வு

திருவண்ணாமலை மாவட்டத்தில் நடந்த மக்கள் நீதிமன்றத்தில் 3,211 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.

Update: 2022-11-12 17:06 GMT

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றம் மற்றும் கிளை நீதிமன்றங்களில் சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் தேசிய அளவிலான மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. இதில் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள சட்டப்பணிகள் ஆணைக்குழு அலுவலகத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான மக்கள் நீதிமன்றத்திற்கு கூடுதல் மாவட்ட அமர்வு நீதிபதி இருசன்பூங்குழலி தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.

தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி ஈஸ்வரமூர்த்தி வரவேற்றார். இதில் நீதிபதிகள், வழக்கறிஞர்கள் மற்றும் பலர் கலந்துகொண்டனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் மோட்டார் வாகன விபத்து வழக்குகள், காசோலை வழக்குகள், சொத்து சம்பந்தமான வழக்குகள், வங்கியில் விவசாய கடன் மற்றும் கல்வி கடன் பெற்ற வாராக்கடன் போன்றவை தொடர்பான 5 ஆயிரத்து 712 வழக்குகள் விசாரணைக்காக எடுத்து கொள்ளப்பட்டது. இதில் 3,211 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.

இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடாக ரூ.18 கோடியே 54 லட்சத்து 8 ஆயிரத்து 165 வழங்க உத்தரவிடப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்