249 வழக்குகளுக்கு தீர்வு

249 வழக்குகளுக்கு தீர்வு

Update: 2022-08-14 19:44 GMT

பட்டுக்கோட்டை

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் பட்டுக்கோட்டை வட்ட சட்டப் பணிகள் குழு சார்பில் தேசிய மக்கள் நீதிமன்றம் நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதி டி.வி.மணி தலைமை தாங்கினார். பட்டுக்கோட்டை வட்ட சட்டப் பணிகள் குழு தலைவரும் சார்பு நீதிபதியுமான பாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். முன்னதாக நீதிபதிகள் கோர்ட்டு வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டனர். தொடர்ந்து நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 249 வழக்குகளுக்கு சமரச தீர்வு காணப்பட்டது. மேலும் ரூ.90 லட்சத்து 67 ஆயிரத்து 700 தீர்வு தொகையாக எட்டப்பட்டது. நிகழ்ச்சியில் பட்டுக்கோட்டை குற்றவியல் நீதித்துறை நடுவர் சத்யா, மாவட்ட உரிமையியல் நீதிபதி ரவிச்சந்திரன், வக்கீல்கள், கோர்ட்டு பணியாளர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை பட்டுக்கோட்டை வட்ட சட்டப் பணிகள் குழு நிர்வாக அலுவலர் சந்தோஷ் குமார் செய்திருந்தார்.

Tags:    

மேலும் செய்திகள்