தேனி மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 2 ஆயிரத்து 10 வழக்குகளுக்கு தீர்வு

தேனி மாவட்டத்தில் உள்ள கோர்ட்டுகளில் நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 2 ஆயிரத்து 10 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.

Update: 2023-02-11 20:30 GMT

தேனி மாவட்டத்தில் உள்ள கோர்ட்டுகளில் நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 2 ஆயிரத்து 10 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.

தேசிய மக்கள் நீதிமன்றம்

தேனி மாவட்டத்தில் உள்ள கோர்ட்டுகளில் தேசிய மக்கள் நீதிமன்றம் நேற்று நடந்தது. மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் மாவட்ட ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் நடந்த தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. இதற்கு தேனி மகளிர் விரைவு கோர்ட்டு நீதிபதி திலகம் தலைமை தாங்கி, நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் ராஜமோகன் முன்னிலை வகித்து பேசினார்.

தலைமை ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு கோபிநாதன், சார்பு நீதிபதி சுந்தரி, ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு லலிதாராணி, கூடுதல் மகிளா நீதிபதி ரமேஷ் மற்றும் வக்கீல்கள் கலந்துகொண்டனர்.

பெரியகுளம் கோர்ட்டில் சார்பு நீதிபதி மாரியப்பன், ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு சர்மிளா ஆகியோர் முன்னிலையிலும், உத்தமபாளையம் கோர்ட்டில் சார்பு நீதிபதி சுரேஷ்குமார், மாவட்ட உரிமையியல் நீதிபதி சரவண செந்தில்குமார், மாஜிஸ்திரேட்டுகள் ரமேஷ், ராமநாதன் ஆகியோர் முன்னிலையிலும் தேசிய மக்கள் நீதிமன்றம் நடந்தது.

வழக்குகளுக்கு தீர்வு

ஆண்டிப்பட்டி கோர்ட்டில் மாவட்ட உரிமையியல் நீதிபதி கண்ணன், ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு பிச்சைராஜன் ஆகியோர் முன்னிலையிலும், போடி கோர்ட்டில் ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு வேலுமயில் முன்னிலையிலும் தேசிய மக்கள் நீதிமன்றம் நடந்தது.

இந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில், நிலுவையில் உள்ள வழக்குகள் மற்றும் வங்கிகளில் வராக்கடன்கள் தொடர்பான வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. மாவட்டத்தில் உள்ள கோர்ட்டுகளில் நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தின் மூலம் மொத்தம் 2 ஆயிரத்து 10 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. இதன்மூலம் நிலுவை வழக்குகளில் ரூ.4 கோடியே 14 லட்சத்து 5 ஆயிரத்து 420 மதிப்பில் தீர்வு பெற்றுக்கொடுக்கப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்