நில அபகரிப்பு தொடர்பான 16 மனுக்களுக்கு தீர்வு

நில அபகரிப்பு தொடர்பான 16 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது

Update: 2022-11-25 21:35 GMT

பாளையங்கோட்டை:

நெல்லை மாவட்ட போலீஸ் நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவில் நிலுவையில் உள்ள நில அபகரிப்பு சம்பந்தமான மனுக்களை விரைந்து முடிப்பதற்காக மாவட்ட கலெக்டர் விஷ்ணு மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் ஆகியோர் உத்தரவிட்டுள்ளனர். இதையொட்டி மாவட்ட போலீஸ் அலுவலகத்தில் நேற்று சிறப்பு முகாம் நடைபெற்றது. முகாமில் உதவி கலெக்டர் தமிழரசி, சிறப்பு தாசில்தார் பகவதி பெருமாள், துணை தாசில்தார்கள் சரவணன் மற்றும் இசைவாணி, கிராம நிர்வாக அலுவலர்கள், மாவட்ட பதிவாளர்கள், சார்பதிவு அலுவலர்கள், மாவட்ட நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு போலீஸ் துணை சூப்பிரண்டு ஜெயபால் பர்னபாஸ் மற்றும் இன்ஸ்பெக்டர் மீராள்பானு, சப்-இன்ஸ்பெக்டர் சோபியா, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் கலந்து கொண்டு நிலுவையில் உள்ள நிலஅபகரிப்பு தொடர்பான மனுக்களின் மனுதாரர்கள் மற்றும் எதிர்மனுதாரர்களை அழைத்து அவர்களிடம் விசாரணை நடத்தினர். இதில் 16 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்