மக்கள் நீதிமன்றத்தில் ரூ.1¾ கோடிக்கு தீர்வு

ராணிப்பேட்டையில் நடந்த மக்கள் நீதிமன்றத்தில் ரூ.1¾ கோடிக்கு தீர்வு காணப்பட்டது.

Update: 2023-09-09 18:03 GMT

ராணிப்பேட்டை ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் வட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் தேசிய அளவிலான மக்கள் நீதிமன்றம் நீதிபதிகள் ஜான் சுந்தர் லால், ஜெயசூர்யா, நவீன்துரைபாபு ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. இதில் நிலுவையில் இருந்த மோட்டார் வாகன விபத்து வழக்கு, அசல் வழக்கு, நிறைவேற்று மனு மற்றும் சிறுவழக்கு உள்பட மொத்தம் 149 வழக்குகளில் ரூ.1 கோடியே 76 லட்சத்து 25 ஆயிரத்துக்கு தீர்வு காணப்பட்டது.

ரூ.20 லட்சம் இழப்பீடு

கலவை வட்டம் பள்ளநாகலேரி கிராமத்தை சேர்ந்தவர் சஞ்சய் (வயது 20). கட்டுமான தொழிலாளியான இவர் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 4-ந் தேதியன்று இருசக்கர வாகனத்தில் சென்றபோது எதிரே வந்த இருசக்கர வாகனம் மோதியது. இதில் படுகாயமடைந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இது தொடர்பாக சஞ்சயின் உறவினர்கள் ராணிப்பேட்டை கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் இழப்பீட்டு கேட்டு வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கும் நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. வழக்கறிஞர் அண்ணாதுரை ஆஜராகி வாதிட்டார். இதில் விபத்தில் இறந்த சஞ்சய் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் இழப்பீடாக வழங்க இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு நீதிபதி உத்தரவிட்டு, அதற்கான ஆணையை வழங்கினார்.

Tags:    

மேலும் செய்திகள்