சேதுராமபாண்டியன் சிலைக்கு நடிகர் நெப்போலியன் மரியாதை

நெல்லையில் சேதுராமபாண்டியன் சிலைக்கு நடிகர் நெப்போலியன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

Update: 2022-09-15 20:42 GMT

நெல்லை சி.என்.கிராமத்தில் அகில இந்திய பசும்பொன் முன்னேற்ற கழக தலைவர் ஏ.எம்.மூர்த்தி தேவர் இல்ல புதுமனை புகுவிழா நடந்தது. அவரது வீட்டிற்கு முன்னாள் மத்திய மந்திரியும், நடிகருமான நெப்போலியன் வருகை தந்து வாழ்த்தினார். தொடர்ந்து அங்குள்ள கட்சி அலுவலகத்தில் டாக்டர் சேதுராமபாண்டியன் சிலைக்கு நெப்போலியன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் மாநகர தி.மு.க. துணை செயலாளர் சுதா மூர்த்தி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்