மலைக்கு தீ வைப்பு
கே.வி.குப்பம் அருகே மலைக்கு தீ வைத்தத்தில் செடி, கொடிகள் எரிந்தது.
கே.வி.குப்பம் அருகே கொசவன் புதூர் கிராமம் - கே.ஏ.மோட்டூர் இடையே, குடியாத்தம் - காட்பாடி தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி அமைந்து உள்ள மலைமீது நேற்று இரவு மர்ம நபர்கள் வைத்த தீ மளமள என்று பரவியது. இதனால் மூலிகைச் செடிகள், மரங்கள் எரிந்து நாசமானது.
வரும் கோடைகாலத்தை மனதில் கொண்டு இதற்கு நிரந்தரத் தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.