எள் பயிர் சேதம்; விவசாயிகள் கவலை

திருவையாறு பகுதியில் பெய்த ெதாடர் மழை காரணமாக எள் பயிர் சேதமடைந்தது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.

Update: 2023-05-10 21:53 GMT

திருவையாறு;

திருவையாறு பகுதியில் பெய்த ெதாடர் மழை காரணமாக எள் பயிர் சேதமடைந்தது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.

எள்சாகுபடி

திருவையாறு மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியான தில்லைஸ்தானம், பெரும்புலியூர், அந்தணர்குறிச்சி, காருக்குடி, கண்டியூர், புனவாசல், விளாங்குடி போன்ற கிராமங்களில் கோடை பயிரான எள்ளு சாகுபடி தொடர்ந்து ஆண்டுதோறும் விவசாயிகள் செய்து வருகின்றன. எள் சாகுபடியில் ஒரு ஏக்கருக்கு ரூ.10 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரை செலவு செய்து உள்ளனர். கடந்த 10 நாட்களுக்கு முன்பு பெய்த மழையால் செழிப்பாக இருந்த எள்ளு பயிர் உரம் இட்டு அவற்றை மேலும் மகசூல் காண விவசாயிகள் ஆர்வமாக இருந்தனர்.

விவசாயிகள் கவலை

இந்தநிலையில் மீண்டும் கடந்த வாரம் தொடர்ந்து மழை பெய்ததால் பூ பூக்கும் நிலையில் இருந்த எள் வேர் அழுகி தலை காய்ந்து கீழே சாய்ந்து உள்ளது. விவசாயிகள் வயிலுக்கு சென்று பார்க்க மன வலிமை இல்லாமல் வீட்டிலேயே முடங்கி கிடக்கின்றனர். சிலர் பயிரை பார்ப்பதற்கு மனம் இல்லாமல் ஆடு மாடுகளை விட்டு மேய்த்தும் வருகின்றனர். இதனால் அப்பகுதியில் உள்ள விவசாயிகள் கவலையில் ஆழ்ந்து உள்ளனா். எனவே தமிழக அரசு வேளாண் துறை சார்பில் அலுவலர்களை அனுப்பி பயிர் சேத விவரத்தை ஆய்வு செய்துஉரிய நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்