தொடர் கொள்ளையில் ஈடுபட்டவர் 13 ஆண்டுகளுக்குப்பின் கைது

தொடர் கொள்ளையில் ஈடுபட்டவர் 13 ஆண்டுகளுக்குப்பின் கைது செய்யப்பட்டாா்.

Update: 2023-01-28 18:45 GMT

விழுப்புரம்:

விழுப்புரம் தாலுகா போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த 2009-ம் ஆண்டு நடந்த தொடர் கொள்ளை சம்பவம் தொடர்பாக புதுச்சேரி மாநிலம் கலிதீர்த்தால்குப்பம் தோப்பு தெரு பகுதியைச்சேர்ந்த இருசப்பன் மகன் தினேஷ்குமார்(வயது 38) என்பவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதனிடைய இவ்வழக்கு விசாரணையின்போது தினேஷ்குமார், நீதிமன்றத்தில் ஆஜராகாமல் திடீரென தலைமறைவானார். இதையடுத்து அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும்படி பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டதோடு விழுப்புரம் தாலுகா போலீசாருக்கும் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்பேரில் தினேஷ்குமாரை பிடிக்க போலீசார் பல்வேறு இடங்களில் வலைவீசி தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று தினேஷ்குமாரை தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கணேசன் தலைமையிலான போலீசார் மடக்கிப்பிடித்து கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்