தனித்தனி சம்பவத்தில் பள்ளி மாணவிகள் 2 பேர் கடத்தல்

தனித்தனி சம்பவத்தில் பள்ளி மாணவிகள் 2 பேர் கடத்தப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2023-04-01 18:45 GMT

விழுப்புரம் அருகே உள்ள துளுக்காநத்தம் கிராமத்தை சேர்ந்த 15 வயது மாணவி, பாக்கத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். சம்பவத்தன்று கடைவீதிக்கு சென்று விட்டு வருவதாக பெற்றோரிடம் கூறிச்சென்றவர் வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து மாணவியின் பெற்றோர், விழுப்புரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அந்த புகாரில், தங்கள் மகளை அதே கிராமத்தை சேர்ந்த குமார் மகனான புதுச்சேரியில் ஏ.சி. மெக்கானிக்காக பணியாற்றி வரும் சுரேந்தர் (வயது 24) என்பவர் ஆசைவார்த்தை கூறி கடத்திச்சென்று விட்டதாக கூறியிருந்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கடத்தப்பட்ட மாணவியையும், அவரை கடத்திச்சென்ற சுரேந்தரையும் தேடி வருகின்றனர். இதேபோல் விக்கிரவாண்டி அருகே உள்ள வில்வமாதேவி பகுதியை சேர்ந்த 14 வயதுடைய மாணவி, அணிலாடி கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். சம்பவத்தன்று பள்ளிக்கு சென்ற மாணவி, மாலையில் பள்ளி முடிந்து வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து மாணவியின் பெற்றோர், விழுப்புரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அந்த புகாரில், தங்கள் மகளை அதே கிராமத்தை சேர்ந்த மாரிமுத்து மகன் ரத்தினவேல் (21) என்பவர் ஆசைவார்த்தை கூறி கடத்திச்சென்று விட்டதாக கூறியிருந்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கடத்தப்பட்ட மாணவியையும், அவரை கடத்திச்சென்ற ரத்தினவேலையும் தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்