செந்தில் பாலாஜி இலாக்கா இல்லாத அமைச்சராகவே தொடர்வார்
செந்தில் பாலாஜி இலாக்கா இல்லாத அமைச்சராகவே தொடர்வார்
நாகை மாவட்ட விளையாட்டு மைதானத்தில் முதல்-அமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா நடந்தது. இதில் அமைச்சர் ரகுபதி கலந்துகொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கினார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இதய அறுவை சிகிச்சை செய்ய இருப்பதால் இலாகா இல்லாத அமைச்சராக அவரே தொடர்வார். எத்தனை முறை கவர்னர் புறக்கணிப்பு செய்தாலும் யார் அமைச்சர் என்று முடிவெடுக்கும் அதிகாரம் முதல்-அமைச்சருக்கு மட்டுமே உண்டு. நியாயமாக தான் சோதனை நடைபெறுகிறது என்று பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கூறுவது அநியாயம். சொந்த கட்சியை சேர்ந்த அமைச்சர் வீட்டில் சோதனை நடந்தால் முதல்வரின் ஆதரவு இருக்காதா?. கடந்த ஆட்சியில் அ.தி.மு.க. அமைச்சர்கள் வீட்டில் சோதனைகள் நடந்தபோது எடப்பாடி உள்ளிட்டோர் பதரவில்லையா ? எங்களை பொறுத்தவரை நாங்கள் எந்த தவறும் செய்யவில்லை. இந்த வழக்கு தொடர்பாக எல்லா சாதகமான வாய்ப்பும் எங்கள் தரப்பில் உள்ளது. நாங்கள் வெற்றி பெறுவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.