திருநங்கைகள் முற்றுகை போராட்டத்தால் பரபரப்பு
திருநங்கைகள் முற்றுகை போராட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் சாத்தூர் அமீர்பாளையம், ராஜபாளையம் உள்ளிட்ட பல பகுதிகளில் வசிக்கும் திருநங்கைகள் தங்களுக்கு கடந்த 2017-ம் ஆண்டு இலவச நிலம் வழங்கியும் இதுவரை வீடு கட்டுவதற்கு பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்காத நிலையில் உடனடியாக தங்களுக்கு வீடு வழங்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து மாவட்ட திட்ட இயக்குனர் திலகவதி அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி புதிய கலெக்டர் பொறுப்பேற்றவுடன் உடனடியாக பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என்று உறுதி அளித்தார்.