செங்கோட்டை யூனியன் தலைவியின் கணவர் தூக்குப்போட்டு தற்கொலை
செங்கோட்டை யூனியன் தலைவியின் கணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
செங்கோட்டை:
தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள தெற்குமேடு கிராமம் இந்திரா காலனி பகுதிைய சேர்ந்தவர் தமிழ்செல்வன் மகன் மோகன்ராஜ் (வயது 35). இவருடைய மனைவி திருமலைச்செல்வி. தி.மு.க.வை சேர்ந்த இவர் செங்கோட்டை யூனியன் தலைவராக இருந்து வருகிறார். இவர்களுக்கு ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர். மோகன்ராஜூக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததாகவும், இதை மனைவி கண்டித்ததால் அவர்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த மோகன்ராஜ் அவரது பூர்வீக வீட்டில் நேற்று முன்தினம் இரவு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தகவல் அறிந்த புளியரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தீபன்குமார் மற்றும் போலீசார் அங்கு சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். யூனியன் தலைவியின் கணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது.