மூத்த குடிமக்கள் பொதுக்குழு கூட்டம்
மயிலாடுதுறையில் மூத்த குடிமக்கள் பொதுக்குழு கூட்டம் நடந்தது
மயிலாடுதுறையில் மூத்த குடிமக்கள் அவையின் 35-வது ஆண்டு விழா, பாராட்டு விழா மற்றும் பொதுக்குழு கூட்டம் நடந்தது. விழாவிற்கு அவைத் தலைவர் டி.எஸ்.தியாகராஜன் தலைமை தாங்கினார். செயலாளர் தியாகராஜன், பொருளாளர் கலியபெருமாள், துணைத்தலைவர்கள் செல்வம், அருணாச்சலம், வீராசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மூத்த குடிமக்கள் பேரவையின் பொதுக்குழு கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.. முடிவில் துணை செயலாளர் சையதுஉசேன் நன்றி கூறினார்.