சிவகாசி,
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் நிறுவனர் மூப்பனார் பிறந்தநாள் விழா விருதுநகர் வடக்கு மாவட்டம் சார்பில் சிவகாசியில் நடைபெற்றது. இந்த விழாவிற்கு விருதுநகர் வடக்கு மாவட்ட தலைவரும், பள்ளப்பட்டி பஞ்சாயத்து தலைவருமான ராஜபாண்டி தலைமை தாங்கி அன்னதானத்தை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் 500 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மாநில இளைஞர் அணி செயலாளர் ராஜன், வட்டார தலைவர் முருகன், மாவட்ட, ஒன்றிய, சிவகாசி மாநகர நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.