செங்கோட்டை-மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் ரெயில் சேவை 25-ந் தேதி தொடங்கும்

செங்கோட்டை-மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் ரெயில் சேவை 25-ந் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது

Update: 2022-10-19 19:17 GMT


மதுரை கோட்ட ரெயில்வேக்கு உள்பட்ட செங்கோட்டையில் இருந்து தினமும் மதுரைக்கு 3 எக்ஸ்பிரஸ் கட்டண பாசஞ்சர் ரெயில்கள் இயக்கப்படுகின்றன.இதற்கிடையே, செங்கோட்டையில் இருந்து தினமும் காலை 7 மணிக்கு மதுரை புறப்படும், செங்கோட்டை-மதுரை எக்ஸ்பிரஸ் கட்டண பாசஞ்சர் ரெயில் மயிலாடுதுறை வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து, செங்கோட்டை-மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் ரெயில் (வ.எண்.16848) வருகிற 24-ந் தேதி முதல் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், இயக்க காரணங்களுக்காக இந்த ரெயில் சேவை வருகிற 25-ந் தேதி முதல் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், மயிலாடுதுறையில் இருந்து செங்கோட்டை வரும் எக்ஸ்பிரஸ் ரெயில் (வ.எண்.16847) மஞ்சத்திடல் ரெயில் நிலையத்தில் நின்று செல்லவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த ரெயிலில் 12 பொது பெட்டிகள் இணைக்கப்பட்டு இருக்கும்.

Tags:    

மேலும் செய்திகள்