செஞ்சேரிப்புத்தூர் அரசு பள்ளியில் பள்ளி மாணவிகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு
செஞ்சேரிப்புத்தூர் அரசு பள்ளியில் பள்ளி மாணவிகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு நடந்தது.
சுல்தான்பேட்டை
செஞ்சேரிப்புத்தூர் அரசு பள்ளியில் பள்ளி மாணவிகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு நடந்தது.
மேலாண்மை குழு கூட்டம்
செஞ்சேரிப்புத்தூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு தலைவர் எஸ்.கே.டி. பழனிச்சாமி தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியர் கணேசன் வரவேற்றார்.பள்ளி மேலாண்மை குழு தலைவர் தங்கமணி முன்னிலை வகித்தார். பள்ளி மேலாண்மை குழு கல்வியாளர் கனிமொழி, சுல்தான்பேட்டை வட்டார வளமையம் ஆசிரியர் பயிற்றுனர் ஷோபனா ஆகியோர் பள்ளி சுகாதாரம், குடிநீர் வினியோகம், காலை சிற்றுண்டி, பெண் குழந்தைகள் பாதுகாப்பு உள்ளிட்டவை குறித்து பேசினர்.
பாதுகாப்பு
1 முதல் 3-ம் வகுப்புகளுக்கான எண்ணும் எழுத்தும் கல்வி பயிற்சி முறையில், மாணவர்கள் திறன் மேம்பாடு அடைவதைப் பற்றியும், குறைதீர் கற்பித்தல் முக்கியத்துவம் அளித்து மாணவர்கள் வாசிப்பு திறனை அதிகரிக்க செய்வது பற்றி தலைமை ஆசிரியர், ஆசிரியர்களுடன் பெற்றோர்களுடன் கலந்துரையாடினார். மேலும் பெண் குழந்தைகளிடம் சரியான தொடுதல், தவறான தொடுதல் பற்றி மாணவிகளின் பெற்றோருக்கு விளக்கப்பட்டது. மேலும் மாணவிகளின் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. 1920 -ல் தொடங்கிய இப்பள்ளி 100 ஆண்டுகள் முடிந்ததையடுத்து நூற்றாண்டு விழா வரும் பிப்ரவரி மாதம் நடத்துவது என கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில் மாணவ-மாணவிகள், பெற்றோர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் ஆசிரியை வெண்ணிலா நன்றி கூறினார்.