படுகர் கலாசாரத்தை பாதுகாக்க கருத்தரங்கம்
படுகர் கலாசாரத்தை பாதுகாக்க கருத்தரங்கம் நடத்த வேண்டும் என கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கோத்தகிரி,
கோத்தகிரியில் பொரங்காடு சீமை படுகர் நல சங்க நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு சங்க தலைவர் தியாகராஜன் தலைமை தாங்கினார். துணை தலைவர்கள் போஜன், சங்கர், பொருளாளர் சிவசுப்பிரமணி, ஓரசோலை பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் வருகிற மே 15-ந் தேதி படுகர் தின விழாவை சிறப்பாக கொண்டாட வேண்டும். படுகர் தினத்தை முன்னிட்டு கால்பந்து போட்டி, ஓட்டப்பந்தயம், பேச்சு மற்றும் ஓவிய போட்டிகள் நடத்த வேண்டும். படுகர் கலாசாரத்தை பாதுகாக்க கருத்தரங்கம் நடத்துவது, கோத்தகிரி சுற்றுவட்டார பகுதியில் கஞ்சா பழக்கத்தால் இளைஞர்கள் சீரழிந்து வருவதை தடுக்க காவல்துறையினர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். கிராமங்கள் தோறும் மாதம் ஒருமுறை போதைப்பழக்கத்தில் இருந்து விடுபட விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்துவது என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக ஆல்துரை வரவேற்றார். முடிவில் ரவி நன்றி கூறினார்.