ஆதிபராசக்தி கலை, அறிவியல் கல்லூரியில் "ரோபோ செயல்முறை தானியங்கி" கருத்தரங்கு

கலவை ஆதிபராசக்தி கலை, அறிவியல் கல்லூரியில் "ரோபோ செயல்முறை தானியங்கி" கருத்தரங்கு நடந்தது.

Update: 2023-10-10 19:47 GMT

கலவை

கலவை ஆதிபராசக்தி கலை, அறிவியல் கல்லூரியில் "ரோபோ செயல்முறை தானியங்கி" கருத்தரங்கு நடந்தது.

கலவை ஆதிபராசக்தி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கணினி அறிவியல் மற்றும் கணினி பயன்பாடுகள் துறை சார்பில் "ரோபோ செயல்முறை தானியங்கி" என்ற தலைப்பில் மாநில அளவிலான கருத்தரங்கு நடந்தது. கல்லூரி முதல்வர் அ.முகமதுசாதிக் தலைமை தாங்கினார். கணினி அறிவியல் மற்றும் கணினி பயன்பாடுகள் துறைத்தலைவர் பூ.வெ.பிரவின்சுந்தர் வரவேற்றார்.

இதில் சிறப்பு அழைப்பாளர்களாக கோவை பி.எஸ்.ஜி. கலை மற்றும் அறிவியல் கல்லூரியை சேர்ந்த பேராசிரியர் சி.திருமூர்த்தி கலந்துகொண்டு பேசுகையில், ரோபோட்டிக் அனைத்து துறைகளிலும் புரட்சி ஏற்படுத்தும் ஆற்றல் பெற்றது. உலகளாவிய சவால்கள் எதிர்கொள்வதில் பெரும் பங்கு வகிக்கும் என்று தெரிவித்து அதன் பயன்பாடுகளை விளக்கி கூறினார்.ஸ்ரீராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியை சேர்ந்த பேராசிரியர் பி.மணிகண்டபிரபு 'ரோபோ செயல்முறை தானியங்கி' என்ற தலைப்பில் உலகளவில் தொழில்கள், பாரம்பரிய செயல்முறைகள், வங்கி நிதிச்சேவைகளில் பிழைகளை குறைத்து துல்லியத்தை மேம்படுத்தி அதன் ஆதிக்கத்தை உலகம் முழுவதும் அனைத்து துறைகளிலும் எவ்வாறு பயன்படுகிறது என்று செயல்முறையுடன் விளக்கினார்.

கருத்தரங்கில் மாணவ-மாணவிகள் தங்கள் ரோபோ செயல்முறை தானியங்கி ஆய்வுக்கட்டுரைகளை சமர்ப்பித்தனர். அதில் சிறந்த ஆய்வுக்கட்டுரை தேர்வு செய்யப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. இதில் பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த பேராசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள், மாணவ-மாணவிகள் பலர் கலந்துகொண்டனர். முடிவில் பேராசிரியை கி.சங்கீதா நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்