பெரும்பாறை அருகே தடியன்குடிசையில் மிளகு உற்பத்தி குறித்த கருத்தரங்கு

பெரும்பாறை அருகே தடியன்குடிசையில் மிளகு உற்பத்தி குறித்த கருத்தரங்கு நடைபெற்றது.

Update: 2023-03-12 20:45 GMT

பெரும்பாறை அருகே தடியன்குடிசையில் உள்ள தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையம் மற்றும் கோழிக்கோடு இந்திய நறுமண பயிர்கள் மேம்பாட்டு இயக்கம் சார்பில் மிளகு உற்பத்தி குறித்த கருத்தரங்கு நடைபெற்றது. இதற்கு கோழிக்கோடு இந்திய நறுமண பயிர்கள் விஞ்ஞானி கண்டியண்ணன் தலைமை தாங்கினார். தடியன்குடிசை தோட்டக்கலை ஆராய்ச்சி நிலைய உதவி பேராசிரியர் பாலகும்பகன் முன்னிலை வகித்தார். கொடைக்கானல் தோட்டக்கலை ஆராய்ச்சி நிலைய பேராசிரியர் ரவிச்சந்திரன் வரவேற்று பேசினார்.

தாண்டிக்குடி மண்டல காபி ஆராய்ச்சி நிலைய துணை இயக்குனர் ஜெயக்குமார் சிறப்புரையாற்றினார். பின்னர் மிளகு நவீன சாகுபடி, உற்பத்தி, புதிய ரகங்கள், அறுவடை, நேர்த்தி, ஏற்றுமதி குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. பின்னர் மிளகு சாகுபடி புத்தகம் வெளியிடப்பட்டது. இந்த கருத்தரங்கில் பட்டிவீரன்பட்டி, பெரும்பாறை, தாண்டிக்குடி, மங்களம்கொம்பு, கே.சி.பட்டி, குப்பம்மாள்பட்டி, பண்ணைக்காடு, பன்றிமலை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த ஏராளமான விவசாயிகள் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்