பொது சிவில் சட்டம் குறித்த கருத்தரங்கம்; ஜவாஹிருல்லா பங்கேற்பு

தென்காசியில் த.மு.மு.க. சார்பில் பொது சிவில் சட்டம் குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. பங்கேற்றார்.

Update: 2023-08-14 18:45 GMT

தென்காசி மாவட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் தென்காசியில் பொது சிவில் சட்டம் குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது நிகழ்ச்சிக்கு மாவட்ட தலைவர் முகமது யாகூப் தலைமை தாங்கினார். துணை தலைவர் முகமது பிலால் தொடக்க உரையாற்றினார். ம.ம.க. மாவட்ட செயலாளர் சலீம் வரவேற்றார். பல்வேறு நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். கருத்தரங்கில் மனிதநேய மக்கள் கட்சி மாநில தலைவர் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ., பேச்சாளர் நாஞ்சில் சம்பத், த.மு.மு.க. மாநில துணைப் பொதுச் செயலாளர் மைதீன் சேட்கான் ஆகியோர் கருத்துரை வழங்கினர். முடிவில் நகர தலைவர் அபாபில் மைதீன் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்