முன்னாள் படைவீரர் சார்ந்தோருக்கான கருத்தரங்கம்

முன்னாள் படைவீரர் சார்ந்தோருக்கான கருத்தரங்கம் 30-ந் தேதி நடக்கிறது

Update: 2023-06-24 18:45 GMT

சிவகங்கை மாவட்ட முன்னாள் படைவீரர்கள், படைப்பணியாற்றுவோர் சார்ந்தோர்களுக்கான தொழில் முனைவோர் கருத்தரங்கு மற்றும் திறன் மேம்பாட்டு பயிற்சி கூட்டம் வருகின்ற 30-ந் தேதி பிற்பகல் 4.30 மணிக்கு மாவட்ட கலெக்டர் தலைமையில், கலெக்டர் அலுவலக வளர்ச்சி மன்ற கூடத்தில் நடைபெறுகிறது.

இதில் சுயதொழில் வாய்ப்புகள் குறித்து, பல்வேறு துறை அலுவலர்கள் பேசஉள்ளனர். எனவே, சிறுதொழில் செய்து முன்னேற விரும்பும் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவரை சார்ந்தோர்கள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு பயனடையலாம். தொடர்ந்து, முன்னாள் படைவீரர் சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறவுள்ளது. எனவே மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் படைவீரர் மற்றும் அவரை சார்ந்தோர், தற்போது ராணுவத்தில் பணிபுரியும் படைவீரரின் குடும்பத்தினர்கள் தங்களது குறைகளுக்கான மனுக்களை இரட்டைப்பிரதிகளில் வழங்கி, குறைகளை நிவர்த்தி செய்து பயனடையலாம் இத்தகவலை கலெக்டர் ஆஷா அஜீத் தெரிவித்துள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்