உயர்தர உள்ளூர் ரகங்களை பிரபலப்படுத்துவதற்கான கருத்தரங்கம்- கண்காட்சி

உயர்தர உள்ளூர் ரகங்களை பிரபலப்படுத்துவதற்கான கருத்தரங்கம்- கண்காட்சி நடைபெற்றது.

Update: 2023-03-16 18:07 GMT

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் தனியார் திருமண மண்டபத்தில் உயர்தர உள்ளூர் ரகங்களை பிரபலப்படுத்துவதற்கான கருத்தரங்கம் மற்றும் கண்காட்சி நடைபெற்றது. இதனை மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி, க.சொ.க.கண்ணன் எம்.எல்.ஏ. ஆகியோர் தொடங்கி வைத்து பார்வையிட்டனர். இதில் சம்பா, மாப்பிள்ளை சம்பா, கருப்புகவுனி உள்ளிட்ட நெல் ரகங்கள், மா, பலா, கொய்யா, மாதுளை, முந்திரி, கோவக்காய், நெல்லிக்காய் உள்ளிட்ட காய்கறிகள், பழவகைகள், விவசாய பயன்பாட்டுக்கான உபகரணங்கள், ட்ரோன் மூலம் மருந்து தெளிப்பான் பல்வேறு பொருட்கள் பொதுமக்கள் விவசாயிகளுக்கு கண்காட்சிக்காக வைக்கப்பட்டிருந்தது. இதனை விவசாயிகள் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் பார்வையிட்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்