ருக்மணி வரதராஜன் பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கம்

செம்போடை ருக்மணி வரதராஜன் பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கம்

Update: 2023-05-01 18:45 GMT


வேதாரண்யம் அருகே உள்ள செம்போடை ருக்மணி வரதராஜன் பொறியியல் கல்லூரியில் தொழில் முறை உலகில் தகவல் தொடர்பு திறன்களின் பங்கு என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. கருத்தரங்கிற்கு செம்போடை ஆர்.வி.கல்வி நிறுவனங்களின் நிறுவனர் வரதராஜன் தலைமை தாங்கினார். கல்லூரி செயலாளர் செந்தில் முன்னிலை வகித்து பேசினார். பொறியியல் கல்லூரி முதல்வர் செந்தில்வேலன் கருத்தரங்கை தொடங்கி வைத்தார். துணை முதல்வர் முகமது பைசல் சிறப்புரையாற்றினார். இதில் எஸ்.ஆர்.எம்.பல்கலைக்கழக ஆங்கிலத்துறை உதவி பேராசிரியர் பாலமுருகன் கலந்துகொண்டு பேசினார். நான் முதல்வன் திட்டத்தின் சார்பில் நடந்த ஆன்லைன் தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், நிர்வாக அலுவலர்கள், மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். உதவி பேராசிரியர் ரம்யா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். முன்னதாக உதவி பேராசிரியர் அருள்ஷீலா வரவேற்றார். அகஸ்தியா நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்