ஆதித்தனார் கல்லூரியில் கருத்தரங்கம்
திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் கருத்தரங்கம் நடந்தது.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் ஆதித்தனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் விலங்கியல் துறை சார்பில், 'உயிர் தொழில்நுட்பம் மூலம் தற்காலிக நோய்களைக் கண்டறிவது' பற்றிய ஒரு நாள் கருத்தரங்கம் நடந்தது. கல்லூரி முதல்வர் மகேந்திரன் தலைமை தாங்கினார். கல்லூரி செயலாளர் ஜெயக்குமார் வாழ்த்தி பேசினார். மதுரை காமராஜர் பல்கலைக்கழக இம்முனாலஜி துறைத்தலைவர் (பொறுப்பு) ஜெயலட்சுமி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு உயிர் தொழில்நுட்பம் மூலம் தற்காலிக நோய்களை கண்டறிவது குறித்து விளக்கி கூறினார்.
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக உயிர் தொழில்நுட்ப பேராசிரியர் சுதாகர் 'மாலிக்குளார் பேசிஸ் ஆப் ஏஜின்' என்ற தலைப்பில் பேசினார். இதில் ஆதித்தனார் கல்லூரி, கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரி, வ.உ.சி. கல்லூரி உள்ளிட்ட பல்வேறு கல்லூரிகளில் இருந்து பேராசிரியர்கள், மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். பேராசிரியர் சுந்தர வடிவேல் கருத்தரங்க ஒருங்கிணைப்பாளராகவும், பேராசிரியர்கள் வசுமதி, ஆரோக்கியமேரி பர்னாந்து கருத்தரங்க அமைப்பாளராகவும் செயல்பட்டனர். பேராசிரியர் வசுமதி நன்றி கூறினார்.
ஏற்பாடுகளை பேராசிரியர்கள் லிங்கதுரை, மணிகண்டராஜா, லோக்கிருபாகர், தாவரவியல் துறைத்தலைவர் பாலகிருஷ்ணன் மற்றும் மாணவர்கள் செய்து இருந்தனர்.