எஸ்.புதூர்
எஸ்.புதூர் வட்டார காய்கறி மற்றும் மிளகாய் உழவர் உற்பத்தியாளர்களுக்கான பயிற்சி கருத்தரங்கு எஸ்.புதூர் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. பயிற்சி கருத்தரங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி தொடங்கி வைத்தார். இதில் காய்கறிகள் சாகுபடி செய்யவும், உற்பத்தி பொருட்களை சந்தைப்படுத்துவதற்கான தொழில்நுட்ப ரீதியான வழிமுறைகளை இதில் கலந்து கொண்ட வேளாண், தோட்டக்கலை துறை அதிகாரிகள் கூறினர். இதில் எஸ்.புதூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராஜேஸ்குமார், சத்யன், வருவாய் ஆய்வாளர் மோகன், எஸ்.புதூர் ஊராட்சி தலைவர் ராதாகிருஷ்ணன் உள்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.