சேமங்கி மாரியம்மன் கோவில் திருவிழா

சேமங்கி மாரியம்மன் கோவில் திருவிழா நடந்தது.

Update: 2023-05-07 19:20 GMT

நொய்யல் அருகே சேமங்கியில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் தேர்த்திருவிழாவை முன்னிட்டு கடந்த 23-ந்தேதி சிறப்பு அபிஷேக அலங்காரத்துடன் பூச்சாட்டுதல் நிகழ்ச்சியும், அதனை தொடர்ந்து கம்பம் நடும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

தொடர்ந்து தினமும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பக்தர்கள் புனித நீர் எடுத்து வந்து கம்பத்திற்கு ஊற்றி மாரியம்மனை வழிபட்டு சென்று வருகின்றனர். அதேபோல் தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று வருகிறது.

நேற்று இரவு சுமார் 8 மணிக்கு மேல் வடிசோறு நிகழ்ச்சியும், முப்பாட்டு மாவிளக்கு பூஜையும் நடைபெற்றது. நாளை பொங்கல் வைத்தல், மாவிளக்கு எடுத்து வரும் நிகழ்சியும், இரவு தேரோட்டமும் நடக்கிறது. நாளை மறுநாள் கிடா வெட்டு பூஜை, காப்பு அவிழ்த்தல் நிகழ்ச்சி, கம்பம் பிடுங்கி காவிரி ஆற்றில் விடுதல், தர்மகர்த்தா அழைத்தல், அம்மன் ஊஞ்சல் ஆடுதல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

11-ந்தேதி செல்லாண்டியம்மன், மாரியம்மன் சிறப்பு அலங்காரத்துடன் ஊர்வலமாக நொய்யல் செல்லாண்டியம்மன் கோவிலுக்கு புறப்பட்டு செல்லும் நிகழ்ச்சியும், மஞ்சள் நீராடல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்