செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் பணம் கையாடல்பெண் தபால் அலுவலர் மீது வழக்கு

செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் பணம் கையாடல் செய்த பெண் தபால் அலுவலர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Update: 2023-09-30 18:45 GMT


விழுப்புரம் அருகே உள்ள சிறுவந்தாடு சிவன் கோவில் தெருவை சேர்ந்தவர் சத்தியமூர்த்தி மகள் அஷ்விதா (வயது 30). இவர் கள்ளிப்பட்டு கிராமத்தில் உள்ள தபால் நிலையத்தில் கடந்த 4.5.2021 முதல் 8.1.2022 வரை தபால் அலுவலராக பணியாற்றினார்.

அப்போது அவர், செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து வசூலித்த பணத்தில் ரூ.39 ஆயிரத்து 300-ஐ அரசுக்கு செலுத்தாமல் கையாடல் செய்ததாக கூறப்படுகிறது. இதனிடையே கள்ளிப்பட்டு தபால் நிலையத்தில் உயர் அதிகாரிகள் திடீர் தணிக்கை மேற்கொண்டபோது அஷ்விதா, பணத்தை கையாடல் செய்திருப்பது உறுதி செய்யப்பட்டது.

தபால் அலுவலர் மீது வழக்கு

இதுகுறித்து புதுச்சேரி உட்கோட்ட அஞ்சல் உதவி கண்காணிப்பாளர் வினோத்குமார், வளவனூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் அஷ்விதா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்